இந்த புத்தாண்டில்,
தமிழ்மணம் கமழட்டும்
நட்சத்திர பதிவுகள் ஜொலிக்கட்டும்
தேன்கூடுகள் விரியட்டும்
கவிதைகள் பூக்கட்டும்
முதல் வாசிப்பிலேயே புரியட்டும் ![]()
கட்டுரைகள் வளரட்டும்
சிறுகதைகள் பெருகட்டும்
வலை வட்டம் பெரிதாகட்டும்
பின்னூட்டங்கள் முந்தட்டும்
கோட்டர்கள் அரை_சதங்கள் ஆகட்டும்
அரை_சதங்கள் சதங்கள் ஆகட்டும்
ப்ளாகர் பிரச்சனைகள் தீரட்டும்
சச்சின் பட்டையை கெளப்பட்டும்
இந்தியா உலகக் கோப்பை வெல்லட்டும்
ஹாக்கி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படட்டும்
‘இயந்திரன்’ தூள் கெளப்பட்டும்
2010 வரை படம் ஓடட்டும் ![]()
மருதநாயகம் வெளிவந்து உலகை கலக்கட்டும்
தனுஷ் திருவிளையாடல்கள் நிக்கட்டும்
எஸ்.ஜே.சூர்யா ஒரே அர்த்தத்தில் பேசட்டும்
பேரரசு அடுத்து எந்த ஊருக்கும் செல்லாமல் இருக்கட்டும்
சொம்புவின் பஞ்ச் டயலாக்குகள் பஞ்ச்சர் ஆகட்டும்
தெலுங்கு ஹீரோயின்கள் தமிழில் உலா வரட்டும்
ரவுடி, தாதா கதைகள் ஒழியட்டும்
நகைச்சுவை குடும்ப படங்கள் அதிகரிக்கட்டும்
நகைச்சுவைக்கு தேசிய விருது வழங்கப்படட்டும்
கோலங்கள் அபி ஒரு எபிசோடிலாவது சிரிக்கட்டும் ![]()
மொத்தத்தில் கிகா சீரியல்கள் சுருங்கட்டும்
மக்கள் இசைக் கடலில் மூழ்கட்டும்
நாட்டில்,
திருடர்கள் திருந்தட்டும்
பஞ்சம் பட்டினி ஒழியட்டும்
விபத்துக்கள் குறையட்டும்
தொண்டனுக்காக வாழும் தலைவர்கள் முன்வரட்டும்
காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு வரட்டும்
இலங்கையின் வன்முறை ஒழியட்டும்
சிலைச் சண்டைகள் நிக்கட்டும்
தலைவர் கோஷங்கள் ஒழியட்டும்
முதயோர் இல்லங்கள் குறையட்டும்
நட்பினில் ரகசியங்கள் மறையட்டும்
நட்பு – காதல் வித்யாசம் விளங்கட்டும் ![]()
குறுந்தகவல்கள் பயனுள்ளதாகட்டும்
தன்னலமில்லா முதலாளித்துவம் அமையட்டும்
தீவிரவாதம் ஒழியட்டும்
அனாதைக் குழந்தைகள் தத்தெடுக்கப்படட்டும்
குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிக்குச் செல்லட்டும்
மொத்தத்தில்
“இந்தியா உண்மையிலேயே ஒளிரட்டும்”
நம்மால் ஆன உதவியை இதற்கு நாம் இந்த ஆண்டு முதல் செய்வோம்.
வாழ்க தமிழ் !!!