அடி பெண்ணே!
உன் கை ரேகையில் தான் என் எதிர்காலம்
உன் கூந்தலின் பின்னலில் தான் என் வாழ்கைப்பின்னல்
உன் கண்பிறை தான் என் படுக்கையறை
உன் இதயத்தில் தான் என் வாசம்
உன் புன்சிரிப்பில்தான் என் மகிழ்ச்சி
உன் மூச்சு தான் என் சுவாசம்
இவ்வாறு உன்னை நம்பி நான் இருக்க நீ மட்டும்
ஏனோ என்னை உன் கால்களால் எட்டி உதைக்கிறாய்..
அடடா இதனால் உனது கால்களும் என் வாழ்கையில் இடம்பெற்றதடி கள்ளி!!
குழப்பம் கொள்வதிலும் ஒரு குழப்பம்
அதிகமாக குழப்பிக் கொள்வதா?
குழப்பிக் கொள்ளாமல் இருப்பதா?
-மதன்
1 response so far ↓
kani // June 30, 2009 at 11:52 am
i need tamil kavithai