19th July 2004
கும்பகோணத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு:
இரக்கமில்லை அங்கும்
இங்கும் இரக்கமில்லை
எங்குமே இரக்கமில்லை!
இலந்தளிரை கரியாக்கிய அரக்கன் அவன் காலனுக்கு இரக்கமில்லை
இளம் நெஞ்சங்களின் கதறல்கள் கேட்கப்படுவதில்லை
மாறாக நிவாரணநிதி அளிப்பது அறிவில்லை
பணப்பிசாசுகலாய் மாறி குழந்தைகளை கொலை செய்த
பாவிகளை மன்னிப்பதில் பொருள் இல்லை
அபலை பெற்றோரின் கூக்குரல்கள் பரிதவிப்புகள் உணரப்படுவதில்லை
மாறாக
அரசியல் ஆதாயம் தேடும் பிணம் தின்னும் கழுகுகள் செய்கையால்
அரசியலில் இன்று கற்பில்லை
இளந்தளிர்களின் உயிர் இழப்புகள்
பெற்றோரின் கனவுகள் தேடப்படுவதில்லை
மாறாக
தலையங்கத்திலும், தலைப்புசெய்தியிலும்
சுட சுட செய்திகளை
வெந்து நொந்தவர்களை சுடுவது புனிதமில்லை
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.