காரணமாம்! காரணமாம்!
ஒரு கையளவே காரணமாம்
காதலன் காதலி இடையே
காதல் மலர ஒரு கையளவே காரணமாம்
கணவன், மனைவி இடையே
புணர்ச்சி நிகழ ஒரு கையளவே காரணமாம்
தலைவன் தொண்டன் இடையே பற்று நிகழ
ஒரு கையளவே காரணமாம்
இறைவனுக்கும் பக்தனுக்கும் நடுவே பக்தி பெருக
ஒரு கையளவே காரணமாம்
மனிதரில் சிலர் தெய்வமாவதற்கும்
ஒரு கையளவே காரணமாம்
சிலர் பணம், புகழ் அடைய பயன்படுவதும்
ஒரு கையளவே காரணமாம்
மனிதனின் ஜீவநாடியும் அதுவே
மக்களின் உயிர்த்துடிப்பும் அதுவே
அதுவே இதயம்
0 responses so far ↓
There are no comments yet...Kick things off by filling out the form below.