Unable to the read the Tamil fonts displayed in my blog. Click here to download the font.
Installing the Tamil font in your computer:
- Download the font and save it in desktop
- Open control panel
- Open font folder
- Copy the downloaded font from the desktop
- Paste the font in the font folder.
Refresh the page.
Now you should be able to read the Tamil fonts used in my blog.
Hope U can now read this song
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமை செம்பயிருக்கு வேர்
பயிருக்கு வேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்
புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள்சாதிக்கு சுடர் தந்த தேன்
சுடர் தந்த தேன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்