காந்தி மஹான்


மகானே வர வேண்டும் நீ!

இந்நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களை போக்க
இந்நாட்டை மீண்டும் தாய் திருநாடாக்க

வருந்த வேண்டாம் நீ
உன்னால் எண்ணிய சமுதாயம் அமையவில்லை என
போராட வர வேண்டும் நீ மீண்டும் அச்சமுதயம் அமையப்பெற

பெருமைப்பட வேண்டும் நீ
உன்னால் உன் நண்பர்களால் இந்நாட்டில் சிற்சில மூட நம்பிக்கைகள் ஒழிந்தது என
நம் நாடு உயர்ந்த நிலையில் உள்ளதென

பூரிப்படைய வேண்டும் நீ
உனது கிரமராஜ்ய கொள்கை பெரிய வெற்றியை பெற்றதென

பெண்ணின் விடுதலை
பெண்ணின் பெருமை என பலவற்றை உரைத்த நீ
அவை முழுமையாக நடைபெற வரவேண்டும்

தென்னாபிரிக்க இனவெறி கொள்கையை போக்கிய நீ
காந்தி மான் உனது கொள்கை கொண்ட காந்தியவாதியாக
ஒருவன் மெய்யாக உருவாவதை காட்டிலும் நீயே மறுஜென்மம் எடுப்பது மேலன்றோ?

மகானே
கவலை வேண்டாம் மறு ஜென்மம் எடுத்து எதிர்க்க இருப்பது
நம்மவரைதான் நம்மில் தீயவரைதான்

பயப்படவேண்டாம், உனக்கும் காவல்துறை பாதுகாப்பு உண்டு
மீண்டும் ஒரு கோட்சே உருவாகாமல் தடுக்க
உன்னை துளைடாமல் தடுக்க
பயப்படமால் வர வேண்டும் நீ!!

நன்றி: இக்கவிதையை உருவாக்க செய்த என் தோழிக்கு இது சமர்ப்பணம். இக்கவிதை காந்தி ஜெயந்தியன்று (2002-2003) நடந்த கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s